மக்களே வெளியே வராதீங்க...2 நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்!

மக்களே வெளியே வராதீங்க...2 நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழ்நாடு, புதுச்சேரியில்  இன்றும், நாளையும் வெப்பநிலையானது  ஓரிரு இடங்களில் இயல்பை விட  2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக  இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

                    
           
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து  18,19 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : 922 நில அளவையர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!

மீனவர்களுக்கான  எச்சரிக்கையைப் பொறுத்தவரை 15, 16 தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று 45  முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று  கூறியுள்ளது.

குறிப்பாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையானது  ஓரிரு இடங்களில் இயல்பை விட  2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக  இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.