
கொரோனா தொற்று காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்சபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவதற்கு சுமார் ஒரு வருட காலமாகவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் சிலர், கோயில் பொற்சபை மீது ஏறி ஏன் சாமி கும்பிட அனுமதி மறுக்கிறீர்கள்? என்ன காரணம்? என கோயில் தீட்சிதர்களிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு தீட்சிதர்கள் பக்தர்களுக்கு பதிலளித்துள்ளனர். அப்போது இரு இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.