கோவில் நிலங்கள் ரோவர் கருவியினால் அளவீடு... அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்...

தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களை ரோவர் கருவியின் மூலம் அளவிடப்படும்.

கோவில் நிலங்கள் ரோவர் கருவியினால் அளவீடு... அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்...

தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களை ரோவர் கருவியின் மூலம் அளவிடப்படும் என்று  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில் நிலங்களை அளவிட ரோவர் கருவிகளை செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார். அப்போது கூறியது,

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கோயில் நிலங்களை விரைந்து அளவிடவதற்கான ரோவர் கருவிகளை கொண்டு அளவீடு செய்யப்பட உள்ளது. இதனை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ரோவர் கருவிகள் மூலம் கோவில் நிலங்கள் அளவிடப்படவுள்ளன. வருவாய் துறை சார்பில் வழங்கப்ட்டுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் கோயில் நிலங்கள் அளவிடப்படவுள்ளன, முதற்கட்டமாக இன்று கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் அளவிடப்படவுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 61.99 ஏக்கர்  கோயில் நிலத்தை இன்று முதல் அளவிடப்பட உள்ளது.  மேலும், தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களை ரோவர் கருவியின் மூலம் அளவிடப்படும் என்றும்  ஓராண்டிற்குள் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் முழுவதும் அளவிடப்படும் என தெரிவித்தார்.

இன்னும் 50 கருவிகளை வருவாய் துறையிடம் கேட்டு இருக்கிறோம் தேவைப்பட்டால் மேலும் கூடுதல் கருவிகளை பெறுவோம். அரசியல் களத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்த  அண்ணாமலை எதையாவது தெரிவித்து வருகிறார். மதம், இனம், மொழி அனைத்தையுமு கடந்து அனைவரையும் அறவனைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்த அவர், மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. 

பிரதமர்தான் விநாயகர் சதூர்த்தியை வீட்டில் கொண்டாட சொல்லியிருக்கிறார். வீட்டில் இருந்து விநாயகர் சதூர்த்தி கொண்டாடுங்கள் விநாயகரை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்த அவர், நோய் தொற்றை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடுமையாக தமிழகம் கடைபிடிக்கிறது. தொற்று பரவாமல் காக்கும் பணி முதன்மையானது என்றும் நோய் தொற்றை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடுமையாக தமிழகம் கடைபிடிக்கிறது. தொற்று பரவாமல் காக்கும் பணி முதன்மையானது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்கப்பட்ட மாநிலத்தை மட்டும் வைத்து பாஜக பேசி வருகிறது, அனுமதி வழங்காமல் பல மாநிலங்கள் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு நிலைமை உள்ளது. வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதித்ததில் அரசியல் ஒன்றுமில்லை என கூறினார்.