கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை...! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

வேலூர் மாவட்டம் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை...

கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை...! மர்ம நபர்களுக்கு  வலைவீச்சு...!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியில் விநாயகர் ஆலயம் உள்ளது. இன்று காலையில் அப்பகுதி பொதுமக்கள் கோவிலில் முன்புற கேட்டில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கேட்டில் மாட்டப்பட்டிருந்த உண்டியல் மற்றும் கோவில் பிரகாரத்திற்கு உள்ளே இருந்த உண்டியல் என இரண்டு உண்டியலும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உண்டியலை கொள்ளையடித்தது யார் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்டியலில் சுமார் ரூ.50,000 மேல் பணம் இருக்கலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.