
தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் துவங்கப்பட உள்ளது. இதற்காக வீடு தோறும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் வாயிலாக 20 ஆம் தேதி முதல் விரல் ரேகைப் பதிவு செய்யும் பணிகள் தொடங்கவுள்ளது. இதனால், ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்கு பயோமெட்ரிக் கருவிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உதவித் தொகைக்கான கணக்கெடுப்பு நிறைவு பெற்ற பின் மீண்டும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க:சிங்கப்பூர் பூங்கா போல் மாறுகிறதா சென்னை பூங்காக்கள்?