பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி...! - பள்ளிக்கல்வித் துறை அதிரடி

பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி...! - பள்ளிக்கல்வித் துறை அதிரடி

பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித் தூறை அனுமதியளித்துள்ளது.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங்கள், மகப்பேறு விடுப்பில் சென்ற பணியிடம், பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்புத் தலைமையாசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலாக, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக நியமனங்களை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமித்ஷா வருகை : ஆத்திரமடைந்த பாஜகவினர்... ! நடந்தது என்ன...?

கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.