தமிழகத்தில் இன்று பத்தாவது மெகா தடுப்பூசி முகாம்...

தமிழகத்தில் இன்று பத்தாவது மெகா தடுப்பூசி முகாம்...

தமிழகத்தில் இன்று 10-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றன.
Published on

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழக அரசு செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வியாழக்கிழமை 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 10-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாவர்களை கண்டறிந்து போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்துவருகிறது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com