பாடப்புத்தகங்கள் ரெடி: மாணவர்களே படிக்க தயாராகுங்க

பாடப்புத்தகங்கள்  ரெடி: மாணவர்களே படிக்க தயாராகுங்க

நாளை துவங்க உள்ள 2021-2022-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் தயார் என தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தற்போது முழுஊரங்கு அமலில் உள்ளது. இதையொட்டி தொற்று பரவுவதை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த பள்ளி மற்றும் உயர்நிலை கல்வித்துறைகள் அறிவித்தனர். இந்த நிலையில், நாளை முதல் 2021-2022-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதையொட்டி, 2021-2022-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் தயார் என தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 3.8 கோடி பாடப்புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது எனவும், ஆன்லைன் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் அவசியம் என்பதால் விரைவில் டோர் டெலிவரி மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 91% பாடப்புத்தகங்கள் 120 கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு விடபட்டுள்ளதாகவும், கிடங்குகளில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, பின் ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யப்படும் எனவும் பாடநூல் கழகத்திடம் முன்பதிவு செய்திருந்த தனியார் பள்ளிகளுக்கு விநியோகிக்க 1.1 கோடி புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.