இனி நெல்லை மாவட்ட புதிய பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்...!

இனி நெல்லை மாவட்ட புதிய பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்...!

திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக அமைச்சர் தங்கம் தென்னரசுவை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பொறுப்பு அமைச்சராக நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தான், வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையும் படிக்க : குஷ்பூ குறித்து அவதூறு பரப்பிய சிவாஜி இருஷ்ணமூர்த்தி...நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்!

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இனி திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செயல்படுவார் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

முன்னதாக நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பதிலாக, தற்போது  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.