பாஜக உறுப்பினர்கள் வெற்றிபெற காரணமாக இருந்த அதிமுகவுக்கு நன்றி.! தீர்மானம் நிறைவேற்றிய பாஜக.! 

பாஜக உறுப்பினர்கள் வெற்றிபெற காரணமாக இருந்த அதிமுகவுக்கு நன்றி.! தீர்மானம் நிறைவேற்றிய பாஜக.! 

சட்டப்பேரவை தேர்தலில் 4 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற உறுதுணையாக இருந்த அதிமுகவுக்கு நன்றி தெரிவித்து பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் பாஜக வின் 4 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு பாஜக உறுப்பினர்கள்  சட்டமன்றத்துக்குள் செல்வதால் இது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் மாநில செயற்குழுக்  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற உறுதுணையாக இருந்த அதிமுக வுக்கு நன்றி தெரிவித்து பாஜக மாநில செயற்குழு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.