ஓபிஎஸ்-க்கு 12 மாவட்ட செயலாளர்கள் வெளிப்படையாக ஆதரவு...தீவிரமாகும் ஒற்றைத் தலைமை சர்ச்சை!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓபிஎஸ்-க்கு 12 மாவட்ட செயலாளர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ்-க்கு 12 மாவட்ட செயலாளர்கள் வெளிப்படையாக ஆதரவு...தீவிரமாகும் ஒற்றைத் தலைமை சர்ச்சை!

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருவர் மட்டுமே தலைமை ஏற்க வேண்டும் என இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே பல்வேறு விதங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

போஸ்டர்கள் ஒட்டியும் கோஷங்கள் எழுப்பியும் இரு தரப்பு தொண்டர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து 5வது நாளாக இருதரப்பினரும் தனது ஆதரவாளர்களிடையே இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பு ஆதரவாளர்களும் குவிந்து வாக்குவாதத்திலும் கோஷங்களிலும் ஆரவாரத்திலும் போட்டி போட்டு வருகின்றனர்.  

இதனிடையே அதிமுக அலுவலகம் வந்த ஓபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 12 மாவட்ட செயலாளர்கள் ஒ.பி.எஸ்-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொதுக்குழுக் கூட்டத் தீர்மான கூட்டத்தில் கலந்து கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி, வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது