30 அடி உயரத்தில் தோகை விரித்த மயில்...பார்வையாளர்களை ஈர்த்த 125-வது மலர் கண்காட்சி!

30 அடி உயரத்தில் தோகை விரித்த மயில்...பார்வையாளர்களை ஈர்த்த 125-வது மலர் கண்காட்சி!

உதகையில், 125-வது மலர் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விழா தொடங்கிய நிலையில், உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் திறந்து வைத்தனர். 

இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மரர்களை கொண்டு 30 அடி உயரத்தில், தோகை விரித்த மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

இதையும் படிக்க : கவுன்சிலர்கள் வார்டுக்கு சென்று குறைகளை தீர்த்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் - சக்கரபாணி!

மேலும், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஜெரேனியம், பால்சம், சால்வியா, டெய்ஸி, இன்கி மேரிகோல்ட், பிடகோனியா, பிரன்ச்மேரிகோல்டு உள்ளிட்ட பலவகையான மலர்கள் காட்சி மாடத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. 

அத்துடன் வண்ணத்துப் பூச்சி, தண்ணீர் குழாய், மான்,  நாட்டிய மங்கை, பறவை, மஞ்சள் பை, பூக்காரப் பெண் போன்ற பல்வேறு வடிவங்கள் தத்ரூபமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சி இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.