அதிமுக கூட்டணியில் தான் பா.ஜ.க. உள்ளது...அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - ஈபிஎஸ் திட்டவட்டம்!

அதிமுக கூட்டணியில் தான் பா.ஜ.க. உள்ளது...அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் - ஈபிஎஸ் திட்டவட்டம்!

Published on

அதிமுக கூட்டணியில் தான் பாரதிய ஜனதா கட்சி உள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுவதாக புகார் கூறினார். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்திரம் திட்டம் அதிமுக ஆட்சியில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமியிடம், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பரவி வரும் செய்தி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ், அதிமுக கூட்டணியில் தான் பாரதிய ஜனதா கட்சி உள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்தினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com