அ.தி.மு.க.வுக்கு உரிமையாளர் பா.ஜ.க. மட்டுமே... காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி விமர்சனம்...

அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன - உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே என்று ஜோதிமணி எம்.பி. கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு உரிமையாளர் பா.ஜ.க. மட்டுமே... காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி விமர்சனம்...
Published on
Updated on
1 min read

இராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் கடந்த 2 தினங்களுக்கு முன்பதாக தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், அதிமுகவில் இனிமேல் இரட்டை தலைமைதான். சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், 'அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே!' என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com