உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?
Published on
Updated on
1 min read

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்று பிற்பகல் பிரிவு உபச்சார விழா நடைபெற உள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு:

1960-ஆம்ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த முனீஷ்வர் நாத் பண்டாரி, அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக 2007-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2019-ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்ட அவர், பொறுப்பு நீதிபதியாகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்ட அவர், தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் ஒய்வு பெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று பிற்பகலில் பிரிவு உபச்சார விழா நடைபெற உள்ளது.

மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக பொறுபேற்பு:

இதனிடையே, இன்று ஓய்வு பெறும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, டெல்லியிலுள்ள கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஓரிரு நாட்களில் பதவியேற்க உள்ளார் குறிப்பிடத்தக்கது.

அடுத்த தலைமை நீதிபதி யர்?:

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி  ஓய்வு பெறுவதையொட்டி, அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக எம்.துரைசாமி நாளை பதவியேற்க உள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com