ஆளுநருக்கு முதலமைச்சர் தக்க எதிர்வினை கொடுப்பார் - திருச்சி சிவா விமர்சனம்!

ஆளுநருக்கு முதலமைச்சர் தக்க எதிர்வினை கொடுப்பார் - திருச்சி சிவா விமர்சனம்!
Published on
Updated on
1 min read

ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் திரும்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தக்க எதிர்வினை கொடுப்பார் என திருச்சி சிவா பேசியுள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் தாம்பரம் மாநகர திமுக சார்பில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய திருச்சி சிவா எம்.பி., ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடைசெய்ய வேண்டும் என்ற சட்டதிருத்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதே சட்டமசோதாவை மீண்டும் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால் எப்படி திருப்பி அனுப்பமுடியும், ஒப்புதல் கொடுத்து தானே ஆக வேண்டும் என்று கூறினார்.

ஏற்கனவே, சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை மாற்றி படித்தபோது உடனடியாக எதிர்வினை ஆற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதேபோல் ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க எதிர்வினை கொடுப்பார் என்று விமர்சித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com