முதலமைச்சரின் டெல்லி பயணம்...அரசியலில் ஏற்படுத்திய பரபரப்பு!

முதலமைச்சரின் டெல்லி பயணம்...அரசியலில் ஏற்படுத்திய  பரபரப்பு!

2023 ஜி 20 நாடுகள் மாநாட்டின் முன்னேற்பாடுகள் தொடர்பாக டெல்லியில் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம்:

அண்மையில் இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிசி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் முடிவில், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 நாடுகளின் மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

டெல்லி செல்லும் முதலமைச்சர்:

இந்நிலையில் அடுத்த ஓராண்டில் ஜி20 மாநாட்டில் செயல்படவேண்டிய கூட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும்  கூட்டம் வருகின்ற டிசம்பர் 5 ம் தேதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக கட்சி தலைவருமான முக ஸ்டாலின், மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 54 வகை ராக்கெட்...!

தனிப்பட்ட முறையில் சந்திப்பு:

மேலும், டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து, தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் அரசியல் அரங்கில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.