ஒதுக்கி வைத்த பாஜக! ஒப்பாரி வைத்த காங்கிரஸ்!

ஒதுக்கி வைத்த பாஜக! ஒப்பாரி வைத்த காங்கிரஸ்!

பாஜக பட்டியலினத்தவர் மற்றும்  பழங்குடி மக்களை ஒதுக்கி வைப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். ஆனால் இந்த திறப்பு விழாவிற்கு பழங்குடி சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களை அழைக்கவில்லை என குற்றம் சாட்டி எதிர்கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன. 

இந்நிலையில் புதிய பாஜகவை கண்டித்து கோவை மேட்டுப்பாளையத்தில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி எஸ்டி துறை சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்சி, எஸ்டி மாநிலத் துணைத் தலைவர் காந்தி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பழங்குடி சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காத பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து மத்திய பாஜக அரசு பட்டியலினத்தவர் மற்றும்  பழங்குடி மக்களை புறக்கணித்து வருவதாகவும் இதனால் பட்டியலினத்தவர் மற்றும்  பழங்குடி சமுதாயத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும் இதை கண்டித்து ஒப்பாரி வைத்தும் காந்தி திருவுருவ சில இடம் கோரிக்கை மனு அளித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் நகர தலைவர் தங்கமணி கோவை வடக்கு மாவட்ட எஸ்சி தலைவர் பேரூர் மயில், பொதுச் செயலாளர் ரஹமத்துல்லாஹ், மீனாஹரி ராமலிங்கம், ஹிமாலயன், சக்தி சதீஷ் முருகவேல் ரகுராமன் தங்கராஜ் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!