திமுக அரசு தூய்மை பணியாளர்களை ஏமாற்றிவிட்டது ! நாளை கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம்

திமுக அரசு தூய்மை பணியாளர்களை ஏமாற்றிவிட்டது ! நாளை கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம்

சம்பளம் இல்லை லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள்

தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொள்ள தூய்மைப் பணியாளர்களை மருத்துமனை உயரதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள்.

 திமுக அரசு செயல்பாடு - சமூகநீதிக்கு எதிரானது

திமுக அரசு தங்கள் வாழ்வில் விடியல் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருந்த தூய்மைப் பணியாளர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது. திமுக அரசின் செயல்பாடு சமூகநீதிக்கு எதிரானது- தமிழ்நாடு அரசு ஆர்.சி.எச். தூய்மை பணியாளர்கள் சங்கம் குற்றசாட்டு 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில்  சமூக சமத்துவத்திற்காக மருத்துவர் சங்கத்தின் சார்பாக மருத்துவர் சாந்தி 
மருத்துவத் துறையில் சமூக நீதியை காக்க வேண்டும் எனவும் தூய்மைப் பணியாளர்களுக்கான சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மற்றும் மருத்துவத்துறையில் பல்வேறு இதர கோரிக்கைகளை வலியுறுத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்  மருத்துவர் சாந்தி (சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்)

சம வேலை போதிய ஊதிய வழங்க வேண்டும்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வேலைகளும் தூய்மை பணியாளர்கள் செய்ய வேண்டும்  ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருவர் என்று  வீதம்3140 பணியாளர்கள் 500 ரூபாய் ஊதியத்தில்  நியமிக்கப்பட்டார்கள்  .இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் வேலை செய்வதற்காகவும் அவர்களுக்கு 2007 முதல் தற்போது வரை 1500 ரூபாய் மாதம் தொகுப்பு ஊதியம் வழங்கப்படுவதாகவும்
பல்வேறு துறைகளில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போல் சம வேலை போதிய ஊதிய வழங்க வேண்டும் . 

கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம்

எனவே தமிழ்நாடு ஆர் சி எச் தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் நியாயமான கோரிக்கைகளுக்காக வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில்  நாளை காலை முதல் மாலை வரை கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்த அவர்

பணி நியமனம்

தமிழ்நாடு அரசு2007 ம் ஆண்டு அறிவித்தபடி அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் அதே போன்று நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் பல்நோக்கு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் இவர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

சமூகநீதிக்கு எதிரானது

மேலும்தூய்மைப் பணியாளர்களுக்கு போதுமான சம்பளம் வழங்காமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொள்ள தூய்மைப் பணியாளர்களை மருத்துமனை உயரதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள் என்றும் திமுக அரசு தங்கள் வாழ்வில் விடியல் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருந்த தூய்மைப் பணியாளர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது. திமுக அரசின் செயல்பாடு சமூகநீதிக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com