நீட் தேர்வு முடிவுகள் சமூக நீதிக்கு எதிரானது...ரத்து செய்வதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஓபிஎஸ்!

நீட் தேர்வு முடிவுகள் சமூக நீதிக்கு எதிரானது...ரத்து செய்வதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஓபிஎஸ்!

நீட் தேர்வு முடிவுகள் சமூக நீதிக்கு எதிரானது என்ற ஆய்வின் அடிப்படையில், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு 2011-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு அடித்தளமிட்டபோதே அதனை கடுமையாக எதிர்த்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...காரணம் இதுதான்!

எனவே கிராமப்புறங்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.