திமுகவின் தேர்தல் அறிக்கை, வெற்று அறிக்கை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது....ஓபிஎஸ்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்க்கும் பொழுது திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை, வெற்று அறிக்கை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது....ஓபிஎஸ்
Published on: 
Updated on: 
1 min read

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ் கூறுகையில்,  நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் அதிமுக தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளது என்றார்.

மேலும் குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை கூடியது குறித்த கேள்விக்கு, திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது என கூறினார்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடைபெறும் ரெய்டு குறித்த கேள்விக்கு, நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com