48 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்...கொரோனா சிகிச்சை மருத்துமனைகளுக்கு சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

48 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்...கொரோனா சிகிச்சை மருத்துமனைகளுக்கு சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

கொரோனா 2வது அலையின்போது உலகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.  இந்த நிலையில், கொரோனா 3வது அலை ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.  அதற்கேற்றாற்போன்று, சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிகாட்டுதல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.  இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மருத்துவமனைகளும் தற்போது கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும் என்றும், உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது குறித்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள்  48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள சுகாதாரத்துறை ஆக்சிஜன் சிலிண்டர், அதனை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும் என்றும், வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும்,  தெரிவித்துள்ளது.