சட்டப்பேரவையில் என்ட்ரீ கொடுத்த ஓபிஎஸ் ...புறக்கணித்த ஈபிஎஸ் தரப்பினர்!

சட்டப்பேரவையில் என்ட்ரீ கொடுத்த ஓபிஎஸ் ...புறக்கணித்த ஈபிஎஸ் தரப்பினர்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வருகிற 19ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அவைக்கு வருகை தந்திருந்த நிலையில், எதிர்கட்சி தரப்பில்  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். ஓ.பி.எஸ் தனக்கான எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்தார். கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, அவை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் ஓபிஎஸ் கையொப்பம்:

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில், அவை கூட்டத்தொடரை அக்டோபர் 19ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கையேட்டில் எதிர்கட்சி துணை தலைவர் பதவிக்கு நேராக கையொப்பமிட்டுள்ளார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ், அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்பதாக தெரிவித்தார். 

ஈபிஎஸ் தரப்பு புறக்கணிப்பு:

முன்னதாக,  ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்கட்சி துணைத் தலைவர் அந்தஸ்தில் இருந்து நீக்காமல், இருக்கைகளிலும் மாற்றம் செய்யாமல் இருந்ததால் அதிருப்தியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள்,  முதல் நாள் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com