12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை...!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க : ”15வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” - இராமதாசு!

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகள்,  நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.