எதிரி நாடு செய்யும் வேலையை சொந்த நாட்டிலேயே செய்துள்ளது மோடி அரசு... ஜோதிமணி எம்.பி. கடும் விமர்சனம்...

பெகாஸஸ் மென்பொருளின் மூலம் உளவு பார்க்கும் எதிரி நாடு செய்யக்கூடிய வேலையை நரேந்திர மோடியிலான ஒன்றிய அரசு தன் சொந்த நாட்டில் செய்துள்ளது என ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

எதிரி நாடு செய்யும் வேலையை சொந்த நாட்டிலேயே செய்துள்ளது மோடி அரசு... ஜோதிமணி எம்.பி. கடும் விமர்சனம்...

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் ALIMCO நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் குஜிலியம்பாறை உள்ள சமுதாய கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாமில் குஜிலியம்பாறை தாலுகா சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்கு வந்திருந்தனர். 

இவர்களை சந்தித்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தங்கள் குறைகளை கேட்டறிந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாமில் இருந்த மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த கரூர் பாராளுமன்ற ஜோதிமணி,

பெகாஸஸ் மென்பொருளை குறித்து காங்கிரஸ் கட்சியினர் என்ன சொல்லி நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோமோ அதைத்தான் இன்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல ஊடகவியலாளர்கள், பொதுமக்களையும் மோடி அரசு உளவு பார்த்து உள்ளது இது மட்டுமல்ல பெகாஸஸ் மென்பொருளை தனிப்பட்ட நபர்கள் வாங்குவதற்கு சாத்தியக்கூறு இல்லை அரசு மட்டுமே வாங்க முடியும்.

இவ்வாறு இருக்கும் நிலையில் இந்திய அரசாங்கம் இந்த மாதிரி உளவு பார்க்கும் மென்பொருளை இஸ்ரேலிடம் வாங்கியது முக்கியமான உயர் பதவியில் உள்ளவர்களின் தகவல்களை பெகாஸஸ் மென்பொருளின் சர்வரில் பதிவாகியிருக்கும். எனவே இந்தியாவின் தேசத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வேலையை மேலும் எதிரி நாடு செய்யக்கூடிய வேலையை நரேந்திர மோடியிலான அரசு செய்துள்ளது.  

இந்த மென்பொருளை அரசாங்கம் தான் வாங்க வேண்டும் என்றால் மோடி அவர்கள் உத்தரவின்பேரில் வாங்க பட்டதா அல்லது உள்துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் வாங்கப்பட்ட தேசத்துரோக குற்றத்திற்கு ஈடுபட்டது யார். இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் போராட்டங்களை நடத்தினோம்.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றமே ஒன்றிய அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத எனவும் தேச பாதுகாப்பு என சொல்லி ஒன்றிய அரசு தவறு செய்து கொண்டிருக்கிறது.  அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் நீதிபதிகள் மற்றும் பல சாதாரண மனிதர்களையும் இந்த தேசத்தில் முழு சுதந்திரம் உள்ளது.

இந்நிலையில் தனிமனிதனின் அந்தரங்கத்தில் அரசாங்கம் நுழையக் கூடாது ஒன்றிய அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது எனவே மிக விரைவில் உண்மை வெளிவரும்.

மேலும் ராகுல் காந்தி சொல்வதுபோல் வரும் நவம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது இந்த கூட்டத்தொடரில் நிச்சயமாக மோடி அரசு இந்த தேசத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என நாங்கள் கேட்போம் மேலும் எதிர்க்கட்சிகளும் செய்யும் என கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வேடசந்தூர் செய்தியாளர் :
மதி அரசன் (7502623372)