அணை குறித்து பேச ஓ.பி.எஸ்.,  இபிஎஸ்-க்கு தார்மீக உரிமையில்லை .... துரைமுருகன்

முல்லைபெரியாறு அணை குறித்து பேச ஓ.பி.எஸ்.,  இபிஎஸ்-க்கு தார்மீக உரிமையில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.   

அணை குறித்து பேச ஓ.பி.எஸ்.,  இபிஎஸ்-க்கு தார்மீக உரிமையில்லை .... துரைமுருகன்

கேரளாவில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 138 அடியை எட்டியது. உச்சநீதிமன்ற தீர்ப் பின்படி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக பொதுப்பணித்துறை ஆயத்தமான நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட்ட கேரள அரசு,  தமிழக அரசு தரப் பில் யாரும்  பங்கேற்காத நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்கரபாணி உள்ளிட்டோர் முல்லைப் பெரியாறு அணையை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், முல்லைபெரியாறு அணை குறித்து பேச ஓ. பி.எஸ்.,  இ பிஎஸ்-க்கு தார்மீக உரிமையில்லை எனவும், அதிமுக ஆட்சியில் கடந்த 10 வருடங்களாக அவர்கள் ஒருமுறைகூட அணையை ஆய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்தார். முல்லை பெரியாறு அணை பகுதியில் உள்ள 3 மரங்களை அகற்றினால் மட்டுமே பே பி அணையை பராமரிக்க முடியும் எனவும் கூறினார்.