ரேபிட் எக்ஸ் ரயில் சேவை; இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

ரேபிட் எக்ஸ் ரயில் சேவை; இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

இந்தியாவின் முதல் ரேபிட் எக்ஸ் ரயில் சேவையை பிரதமா் மோடி டெல்லியில் இன்று தொடங்கிவைக்கவுள்ளாா்.

சென்னை- நெல்லை, சென்னை- கோவை உள்ளிட்ட வழித்தடங்கள் உள்பட நாடு முழுவதும் 33 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சொகுசு மற்றும் அதிவேகம் என இந்த ரயில்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய அதிவேக வந்தே ரேபிட் எக்ஸ் ரயில் இந்தியாவில் முதல்முறையாக இயக்கப்படவுள்ளது. குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைக்கும் விதமாக டெல்லி - மீரட் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கவுள்ளாா்.

தற்போதைய வழித்தடத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள காரணத்தால் இந்த ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் இருந்து மீரட் செல்வதற்கான 82 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் நிலையில், ரேபிட் ரயில் மூலம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இலக்கை அடைந்து விடலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக ரேபிட் எக்ஸ் ரயிலில் மொத்தம் ஏசி வசதி கொண்ட ஆறு பெட்டிகள் இருக்கும். அதில் ஒரு பர்ஸ்ட் கிளாஸ் வசதி கொண்ட பெட்டியும், பெண்களுக்கான ஒரு பெட்டியும், 4 சாதாரண பெட்டிகளும் இருக்கும். ஒரு பெட்டியில் 72 பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம். அனைத்து இருக்கையிலும் செல்போன் சார்ஜிங் செய்யும் வசதி, புத்தகங்கள் வைத்து படிக்கும் வகையிலான வசதி அமைந்துள்ளன. மேலும் சிசிடிவி கேமரா, வைஃபை வசதி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ரயிலில் அமைக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க: பெண்களையும் கருவறைக்கு அழைத்துச் சென்ற பங்காரு அடிகளார்!