சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதியை அறிவித்தார் சபாநாயகர்...!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதியை அறிவித்தார் சபாநாயகர்...!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என சபநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுவதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க: மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!

சட்டப்பேரவை தொடங்கிய முதல் நாளில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும் பேரவை ஒத்திவைக்கப்படும் எனவும், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் யாரென்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், எடப்பாடி தரப்பு தனியாகவும், ஓபிஎஸ் தரப்பு தனியாகவும் என்னிடம் மனு அளித்துள்ளனர். எனவே, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மரபுப்படி இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.