"தமிழக அரசு அறிவித்த பங்குத்தொகை எங்களுக்கு போதாது.." - பழனியில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ..!

"தமிழக அரசு அறிவித்த பங்குத்தொகை எங்களுக்கு போதாது.."  -  பழனியில்  ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்  ..!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் மொட்டை அடிக்கும் இடங்களான சரவண பொய்கை ,சண்முக நதி, மின் இழுவை ரயில் நிலையம், ஒருங்கிணைந்த முடி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 330 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை  வழங்கப்படும் - தமிழக அரசு.

தமிழக அரசு கடந்த ஆண்டு முடி  காணிக்கை செலுத்தும் இடங்களில் பக்தர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், இலவசமாக மொட்டை அடித்து கொள்ளலாம் என்றும் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை  வழங்கப்படும் ,மேலும் ஒரு சீட்டுக்கு முப்பது ரூபாய் பங்கு தொகையாக  வழங்கபடும் எனவும் அறிவித்துருந்தது.

எங்களுக்கு நிரந்தர சம்பளம் என்பது கிடையாது.....

இந்நிலையில் இன்று மதியம் மொட்டை அடிக்கும் ஊழியர்கள் திடீர் பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, "நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம். 330 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் வாரிசு அடிப்படையில் வழங்கபட்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக 70 க்கும் மேற்பட்டோரை பணி நியமனம் செய்யாமல் இருப்பதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது", என்றனர்.  

தமிழக அரசு அறிவித்த பங்குத்தொகை எங்களுக்கு போதாது......

மேலும், தங்களுக்கு நிரந்தர சம்பளம் என்பது கிடையாது, கோவிலில் வழங்கப்படும் பங்குத் தொகையாக மட்டுமே பெற்று வருவதாகவும்,  தமிழக அரசு அறிவித்த பங்குத்தொகை தங்களுக்கு போதாது எனவும் தங்களுக்கு நிரந்தரமான சம்பளமாக  மாதம் நாற்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.  

மேலும், புதிதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளதுபடி,  முடிகாணிக்கை செலுத்த தேவஸ்தான நிர்வாகத்தால் வழங்கபடும்  இலவச ரசீதில் ஊழியர்களின் போட்டோ மற்றும் ஆதார் எண் பொருந்திய சீட்டு வழங்கப்படுவதாகவும் , அதற்கான போட்டோ மற்றும் ஆதார் எண்ணை திருக்கோவில் அலுவலகத்தில் வழங்க வேண்டும் எனவும் கூறியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பக்தர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் முடிகாணிக்கை கோவில் சூப்பிரண்டு முருகாணந்தம் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க     } முறைகேடு நடந்தால் அதற்கான பரிகாரத்தை துறை காணும் - சேகர் பாபு

இன்று காலை திருச்சி சமயபுரத்தில் மொட்டை அடிக்கும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பழனியிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க    }  கள ஆய்விற்காக விழுப்புரம் சென்ற முதலமைச்சர்...ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு!