மணமகளுக்கு தாலிகட்ட முயன்ற காதலனால் பரபரப்பு...! சினிமா பட பாணியில் நடந்த சம்பவம்..!

மாப்பிள்ளையிடமிருந்து தாலியை தட்டி விட்டு தான் கட்ட முயன்ற காதலன்...!
மணமகளுக்கு தாலிகட்ட முயன்ற காதலனால் பரபரப்பு...!  சினிமா பட பாணியில் நடந்த சம்பவம்..!
Published on
Updated on
1 min read

வடசென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில்  வசித்துவரும் ரேவதி என்பவருக்கும், தண்டையார் பேட்டை  நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் நேதாஜி நகரில் அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. 

இந்நிலையில் சினிமா பட பாணியில், மணமகன் தாலி கட்டும் நேரத்தில், பெண்ணிண் காதலன் என கூறப்படும் சதீஷ், மாப்பிள்ளையின் தாலியை தட்டிவிட்டு தான் கட்ட முற்பட்டுள்ளார். அப்போது பெண்ணின் சகோதரன், தாலி கட்ட முற்பட்ட சதீஷை பிடித்து தாக்கியுள்ளார். பின்னர் உறவினர்கள் சேர்ந்து சதீஷை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் மணமகள் வீட்டார் மற்றும் காதலன் சதீஷிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பட பாணியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் தற்போது அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com