இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் - என்னிடம் புகார் வரவில்லை - வெளிப்படையாக கூறிய தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்  - என்னிடம் புகார் வரவில்லை - வெளிப்படையாக கூறிய தேர்தல் அதிகாரி

ஈரோடு இடைத்தேர்தல் 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப் - 27 ஆம் தேதி நடைப்பெறுவதையோட்டி  வாக்குசேகரிப்பதில் தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக்கட்சிகள், சுயட்சை என விருவிருப்பான சூழல் நிலவும் நிலையில் பல வகையான புகார்களும் அனைத்து கட்சியினர் மீதும் எழுந்த வண்ணம் உள்ளன.

தேர்தல் அதிகாரியிடம் புகார்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக புகார் அளித்தாலும் கூட இதுவரையிலும் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் தன்னிடம் வரவில்லை என  தமிழ்நாடு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வந்தேறிகள் என வம்பு இழுத்த சீமான் - கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சிவிசில் ஆப்பில் ஒரே ஒரு புகார்

பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியான தன்னிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆதாரமாக எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமையும் சிவிசில் ஆஃப்பில்  1 புகார் மட்டுமே வந்துள்ளது.

இதையும் படிக்க |  ஈரோட்டில் திமுக அத்துமீறுகிறது- ஓபிஎஸ் திமுகவின் பக்கம் - புகார் கொடுக்க வந்த இடத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்

சமூக வலைத்தளங்களில்  நடவடிக்கை 

சமூக வலைதளங்களில் பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஆனால், இவ்வாறு சமூக வலைதளத்தில் இருப்பதாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை