ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் அதுவரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த 2ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசுட் அமர்வில், வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும் என வேதாந்தா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது, இன்றைய தேதிக்கு வழக்கு பட்டியிலிடப்பட்டு உள்ளது என்றும் அன்றைய தினம் வழக்கை பட்டியலில் இருந்து நீக்காமல் நிச்சயம் விசாரணை செய்ய வேண்டும் என வேதாந்த நிறுவன தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். வழக்கு பட்டியலிடப்பட்ட தேதியில் நிச்சயம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.