”மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மிரட்டுகிறது” - அப்பாவு குற்றச்சாட்டு

மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் இடைத்தரகர்கள் சிலர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை குறிவைத்து மிரட்டல் விடுப்பதாக சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். 

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க : தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்றவை பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் தொழில்அதிபர்களை குறி வைத்து மிரட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், தன்னையே கடந்த மூன்று மாதங்களாக மிரட்டி பயமுறுத்த பார்த்தார்கள் என்றும், கொஞ்ச நாள் தலைமறைவாக இருக்கவேண்டும் என்றும் செல்போன் எண்ணை மாற்றவும் சொன்னார்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டினார். சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.