காலை உணவை சாப்பிட்டு பரிசோதித்த முதலமைச்சர்......

காலை உணவை சாப்பிட்டு பரிசோதித்த முதலமைச்சர்......

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

கள ஆய்வு:

வேலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நேரில் பார்வை:

சத்துவாச்சாரி பகுதியில் உள்ள சி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள  பள்ளிகளுக்கு காலை உணவு தயாரிக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உணவின் தரம்:

இதைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து கேட்டறிந்ததுடன் உணவையும் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

கலந்துரையாடல்:

பின்னர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற முதலமைச்சர்,  பள்ளிக்கு காலை உணவு கொண்டு வரப்படும் நேரம் குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.  இதையடுத்து காலை உணவின் தரம் குறித்து மாணவர்களுடன் கேட்டறிந்ததுடன் உணவினையும் பரிமாறினார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஓபிஎஸ் உடனான சந்திப்பு... சசிகலா குறித்து ஜெ. தீபா கூறியதென்ன?!!