முதலமைச்சருக்கு அவருடைய பையனுக்கு முடி சூடனும் - ஜெயக்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசில் முதலமைச்சர் மக்கள் மீது எந்த கவலையுமில்லை அவர் தன்னுடைய பையனுக்கு முடி சூடுவதில் தான் கவனம் செலுத்துகிறார்

முதலமைச்சருக்கு அவருடைய பையனுக்கு முடி சூடனும் - ஜெயக்குமார்

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணி பற்றி அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்படி பழனிச்சாமி  சீர்காழி, நாமக்கல் கூட்டத்தில் தெளிவு படுத்திட்டாரு.  பாஜக தேசிய கட்சி அவங்களுக்கு சித்தாந்தம் இருக்கு. அவர்கள் வேலை அவங்க பாக்குறாங்க எங்க வேலை நாங்க பாக்குறோம் . அதிமுக கட்சிய பொறுத்தவரையில் இடைகால பொதுச்செயலாளராக  ஏற்றுக்கொள்ளபட்டவர்.

மேலும் படிக்க | இபிஎஸ்-ன் டெண்டர் விவகாரம் பேச அறப்போர் இயக்கத்திற்கு வாய் பூட்டு

தேர்தல் கூட்டணி

எந்த காலத்திலும் அவர்களோடு தேர்தல் கூட்டணி கிடையாது எந்த காலத்திலும் அவர்களோடு இணைத்துகொள்வதாக சூழ்நிலை இல்லை. டிடிவி தினகரன் சொல்லுறாரு இபிஎஸ் உடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று ரொம்ப நல்லது . மீதி பேரும் அதே போல் சென்றால்  நல்லது . கட்சியில் குமுறல் நீர்புகுந்த நெருப்பு அதனுடைய வெளிப்பாடு தான் இன்றைக்கு அதன் வெளிப்பாடாக ஒரு பூனக்குட்டி வெளியில் வந்துருக்கு  அவர்தான் ஆர்.எஸ்.பாரதி என்ன சொல்லுறாரு உழைப்பவர்களுக்கு மரியாத இல்ல, பதவி இல்ல வெளிபடையாக சொல்லுறாரு.

முதல்வர் ஸ்டாலின்

கட்சியின் நிலைமை முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் பற்றி கவலை இல்ல தன்னுடைய பையன் உதயநிதிக்கு முடி சூடனும், இதுதான் முதல்வரின் ஆசை தேர்தல் நெருங்க நெருங்க திமுக மீது பல கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருக்கு. சிபிஐஎம் - திமுக முரண்பாடு இருக்கு , திமுகவிற்கும் காங்கிரசிற்கும் முரண்பாடு இருக்கு விசிகவின் பெண் கவுன்சிலர் தென் சென்னையில் தன்னுடைய பணிய ஆற்ற முடியல வட்ட செயலாளர் மிரட்டுறாரு பெண் கவுன்சிலர் காவல் துறையில் புகார் கொடுக்குறாங்க  தேர்தல் நெங்கும் போது 11 கட்சிகள் என்று சொல்வது கட்டெறும்பு தேய்ந்து சிட்டறும்பு ஆன கதையாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்