மேகம் கருக்குது! மழை வர பாக்குது! வீசி அடிக்குது காத்து!...மக்களே உஷார் !!

மேகம் கருக்குது! மழை வர பாக்குது! வீசி அடிக்குது காத்து!...மக்களே உஷார் !!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வாக்கில் தமிழக-புதுவை
கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.

Here comes the rain

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக, 

01.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

02.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

03.12.2022:  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

04.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

05.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு :

IMD issues red alert; city sees only light rain | Cities News,The Indian  Express

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) : 

Rain warning! Heavy downpour continues in Maharashtra; orange alert issued  in Mumbai, Thane today | India News – India TV

கோடியக்கரை (நாகப்பட்டினம்) 8, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 5, சிதம்பரம் AWS (கடலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), மதுக்கூர் (தஞ்சாவூர்), சிதம்பரம் (கடலூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வம்பன் Agro (புதுக்கோட்டை) தலா 3, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), புதுக்கோட்டை, அண்ணாமலை நகர் (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பாடலூர் (பெரம்பலூர்), மலையூர் (புதுக்கோட்டை), மணல்மேடு (மயிலாடுதுறை) தலா 2, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), காஞ்சிபுரம், தீர்த்தாண்டானம் (ராமநாதபுரம்), சென்னை விமான நிலையம், வட்டானம் (ராமநாதபுரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), காரைக்கால், தொண்டி (ராமநாதபுரம்), மணமேல்குடி (புதுக்கோட்டை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), MRC நகர் ARG (சென்னை), திரூர் அக்ரோ (திருவள்ளூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

Kerala fishermen brave dangerous sea to eke out a livelihood

04.12.2022: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.