ஓபிஎஸ் - ஐ நாடு மன்னிகாது- காவி அணிந்தால் இழி பிறவி - உதயநிதி என்ன செய்துவிட்டார்? கேள்விகளை வீசும் அமைச்சர்

மதுரை பரவை பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்

ஓபிஎஸ் - ஐ நாடு மன்னிகாது- காவி அணிந்தால் இழி பிறவி -  உதயநிதி என்ன செய்துவிட்டார்? கேள்விகளை வீசும் அமைச்சர்

காவி துண்டு போட்டவர்கள் இழி பிறவி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"மதுரையில் எம்.ஜி.ஆர் சிலை மீது யாரோ சமூக விரோதி காவிதுண்டு வீசியுள்ளார். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர்., அவர் மீது காவி துண்டு போட்டவர்கள் இழி பிறவிகள். இதுபோன்ற சமூக விரோத செயல்களை திமுக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். காவி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும்.

தனி கட்சி

தைரியம் இருந்தால் தனி கட்சி துவங்குங்கள் என ஓ.பன்னீர்செல்வம் விடுத்த சவால் குறித்த கேள்விக்கு,"27ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் தெரிவிப்போம்" என தெரிவித்தார்.
அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதாவை நீக்கியவர்களை நாடு மன்னிக்காது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு,"ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு தான் ஜெயலலிதாவை நிரந்தர பொது செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினோம்" என்றார்.

பணத்துக்காக விலை போனால்  அதிமுகவே அல்ல

பணத்தை நம்பி எடப்பாடி பின்னால் சென்றவர்களுக்கு ஆபத்து என பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து குறித்த கேள்விக்கு, "அதிமுக தொண்டனை விலை கொடுத்த வாங்க யாருக்கும் அருகதை இல்லை. பணத்துக்காக விலை போகிறவர்கள் அதிமுகவினர் அல்ல. பண்ருட்டி ராமச்சந்திரன் எத்தனை கட்சிக்கு தாவினார் என்பது தெரியுமா?" என கூறினார்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சொத்து வரி முதல் பால் விலை வரை அனைத்தும் உயர்ந்துள்ளன. இவ்வளவுக்கும் மத்தியிலும் உதயநிதியை அமைச்சர் ஆக்கியுள்ளனர். அடுத்து அவர் முதலமைச்சர் கூட ஆவார். அதற்கான அச்சாரம் தான் இது" என்றார்

"உதயநிதி என்ன சாதித்து விட்டார்? 

செங்கலை தூக்கினார். அதனால் செங்கல் விலை தான் உயர்ந்தது.
நயன்தாராவை கட்டிப்பிடித்து இருப்பார், ஹன்சிகாவை காதலித்து இருப்பார். இது தான் இதுவரை உதயநிதி செய்தது. இவருக்கு இப்போது அமைச்சர் பதவி.
எங்க ஆளு செந்தில் பாலாஜி அவருடைய ஊரில் ஒரு தெருவுக்கு உதயநிதி பெயர் வைத்துள்ளார். அவர் எப்படி காக்கா பிடித்துள்ளார் என பாருங்கள்" என தெரிவித்தார்.