கோரிக்கை மனு வைத்த மாற்றுத்திறனாளி... கண்டித்த அமைச்சர்... காரணம் என்ன?!!

கோரிக்கை மனு வைத்த மாற்றுத்திறனாளி... கண்டித்த அமைச்சர்... காரணம் என்ன?!!

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடான கலைந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.  மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி  பெண்ணிடம் அமைச்சா் கடிந்து பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

கோரிக்கை மனுக்கள்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  நடந்த கோாிக்கை மனுக்கள் வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளி பெண்ணை அமைச்சா்  தா.மோ.அன்பரசன் கடிந்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடான கலைந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் பங்கேற்று மனுக்களை பெற்றாா்.  

உரிய நடவடிக்கை:

இதில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினர்.  அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அதேப்போல் பொதுமக்களும் தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம்வழங்கினர்.

மாற்றுத்திறனாளி:

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான உஷா என்பவர் தான்மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வைத்துள்ளதாகவும், தனக்கு பேருந்தில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் கோரிக்கை மனு வழங்கினார்.   மேலும் இலவச பஸ் பாஸ் இல்லாததால் அவர் பேருந்தில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணிப்பதாக கூறி டிக்கெட்டுக்களையும் காண்பித்தார்.

கண்டித்த அமைச்சர்:

இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள கூட்டத்தில் இருந்த போக்குவரத்துத்துறை அதிகாரியிடம் அமைச்சர் விசாரித்துக்கொண்டிருந்த போது மாற்றுத்திறனாளி பெண்மணி உஷா குறுக்கிட்டு பேசியதால் மேஜையைதட்டி, பேசாத அமைதியாக இரு, உனக்காக தான் நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் என அமைச்சர் கடிந்துகொண்டதால் கூட்டத்தில்சற்றுசலசலப்புஏற்பட்டது.

நடவடிக்கை என்ன?:

மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் முறையாக இலவச பஸ் பாஸ் வேண்டி விண்ணபிக்கலாம் என்றும், வருகின்ற 24ம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகளுக்கென நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணபித்து அவ்விண்ணப்பத்தை உறுதி செய்து தகுதிவாய்ந்ததாக இருப்பின் போக்குவரத்துத்துறைக்கு அனுப்பப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரிடம் போக்குவரத்துத்துறையினர் தகவல்தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com