பாமகவுக்கு ஓட்டு வாங்கி தரலன்னா மாடு மேய்க்கும் சிறுவனுக்கு தான் மாவட்ட, ஒன்றிய பதவி - நிர்வாகிகளை அதிரவைத்த ராமதாஸ்...!

பாமகவுக்கு ஓட்டு வாங்கி தரலன்னா மாடு மேய்க்கும் சிறுவனுக்கு தான் மாவட்ட, ஒன்றிய பதவி - நிர்வாகிகளை அதிரவைத்த ராமதாஸ்...!

திண்டிவனம். செஞ்சி, மயிலம், வானூர் ஆகிய தொகுதியில் கடந்த வாரம் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸின் பேச்சு அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

அதில், நடந்து முடிந்த தேர்தலில் 23- தொகுதியில் போட்டியிட்டு 5-ல் தான் வெற்றி பெற்றோம். உள்ளூர் புரிதலுக்கு விட்டு கொடுப்பது என திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சி காரர்களே பாமகவிற்கு குழி பறித்தனர்.

உள்ளாட்சி தேர்தலிலும் இதே நிலமை தான் தொடர்ந்தது. இந்த நிலமை மீண்டும் தொடராமல் இருக்க ஒரே வழிதான் உள்ளது. அது திண்ணை பிரச்சாரம் தான். வரும் சட்டசபை தேர்தலில் அன்புமணி தலைமையில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும். ஆதலான் ஊர் ஊராக சென்று திண்ணை பிரச்சாரம் மேற்க்கொள்ள வேண்டும். எப்படியாவது 100க்கு 40 சதவீத வாக்குகளை பெற்று 60 எம்.ஏல்.ஏக்களை பெற வேண்டும் என்றார்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் நிர்வாகிகளிடையே பேசிய நிறுவனர் ராமதாஸ்  கூறுகையில்,

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தடை விவகாரத்தில் தமிழக அரசு சரியாகவே மேல் முறையீடு செய்துள்ளதாகவும் மேலும் தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக  நம்பலாம்  என்றார். அதுமட்டுமல்லாது வரபோதும் தேர்தலில் பாமக வெற்றி பெற்று, அன்புமணி ராமதாஸ் முதல்வராக வேண்டும் என்று கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும்.

அதற்காக முழுமையாக பாடுபட வேண்டும், சமூக வளைதலங்கள், திண்ணை பிரச்சாரங்கள் அதிகமாக பயன்படுத்தி மக்களிடம் நெருங்கி செல்ல வேண்டும் என்றார். மேலும் கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியாவிட்டால், மாடு மேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட ஒன்றிய பொறுப்புக்கு நியமிக்கபட வேண்டி இருக்கும் என தெரிவித்தார்.