தீண்டாமை சுவரை இடித்த வட்டாட்சியர்... தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார்..!

தீண்டாமை சுவரை இடித்த வட்டாட்சியர்... தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார்..!

தீண்டாமை சுவரை இடித்த வட்டாட்சியர்... தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார்..!


தோக்கமூர் தீண்டாமை சுவர் 

திருவள்ளூரை சேர்ந்த கிராமத்தில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த தோக்கமூர் கிராமத்தில் 2015ஆம் ஆண்டுக் கட்டப்பட்டத் தீண்டாமை சுவர் இன்று அதிகாலை காவல் துறை பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

நூறு பட்டியலின குடும்பம்

தோக்கமூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டப் பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலித் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மதில் சுவர் ஒன்றுக் கட்டப்பட்டது.

மேலும் படிக்க: செங்குன்றம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிரமத்திற்குள்ளான பகுதிவாழ் மக்கள்

சுவர் கட்டப்பட்டக் காரணத்தினால் பட்டியலின மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லவும், கூலி வேலைக்கு சென்று வரவும் சிரமமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எழுப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

கோரிக்கையை நிறைவேற்றிய வட்டாட்சியர் 


மக்களின் கோரிக்கையையடுத்து, இன்று அதிகாலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினருடன் வந்த வருவாய் துறை அதிகாரிகள் ஐந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தீண்டாமை சுவரை இடித்து அகற்றினர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.