கூகுள் மேப் பார்த்தபடி லாரியை ஓட்டிய டிரைவர்... போக்குவரத்து சிக்னல் மீது மோதி விபத்து...

கூகுள் மேப் பார்த்தபடி சாலையில் வாகனம் ஓட்டியதில் போக்குவரத்து காவல்துறையினரின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் மீது மோதி விபத்து.
கூகுள் மேப் பார்த்தபடி லாரியை ஓட்டிய டிரைவர்... போக்குவரத்து சிக்னல் மீது மோதி விபத்து...
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வேலூரில் இருந்து மணலூர்பேட்டைக்கு லாரியில் சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்றிருந்தார். அப்போது திருவண்ணாமலை பெரியார் சாலை வழியாக லாரியை இயக்கிய மூர்த்தி எந்த வழி செல்ல வேண்டும் என குழப்பத்தில் google map பயன்படுத்திக்கொண்டு சாலை நடுவிலுள்ள சிக்னலில் மோதினார். இதில் சாலையில் உள்ள சிக்னல் சேதமடைந்ததுடன் கீழே விழுந்தது.

லாரியின் முன்புறம் ஒரு பக்கம் முழுமையாக சேதமடைந்தது. இதில்அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் மூர்த்தி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தினால் பெரியார் சாலை அருகில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன செல்வது வழக்கம் சாலை விபத்தில் நடந்த நேரத்தில் யாருக்கும் எந்த ஒரு அசம்பவதாம் நடைபெறவில்லை.

குறிப்பாக பகல் நேரங்களில் திருவண்ணாமலை நகருக்குள் கனரக வாகனங்களை காவல்துறை அனுமதிப்பதில்லை இந்த சூழ்நிலையில் இந்த லாரி திருவண்ணாமலை நகருக்குள் எப்படி வந்தது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com