மத்திய அரசிற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது....திருநாவுக்கரசர் காங்கிரஸ் எம்.பி

மத்திய அரசிற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது....திருநாவுக்கரசர்  காங்கிரஸ் எம்.பி
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறுகையில்,

வாரிசு அரசியலுக்கு எதிராக குரல்கொடுத்த மதிமுக பொது செயலாளர் வைகோவின் மகன் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, வாரிசுகள் அரசியலுக்கு வருவது என்பது பாவமல்ல என்றும் ஜனநாயக நாட்டில் இது இயல்பு என கூறிய அவர், அது அவரது உரிமை என்றார்.

மேலும் பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, மத்திய அரசிற்கு பணம் தேவைப்படும்போது எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது என்றும் காங்கிரஸ் ஆட்சியில்  50 பைசா 1 ரூ உயரும் போது பேராட்டம் நடத்தியவர்கள் இப்போது தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர் என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com