சித்ரா பௌர்ணமியை ஒட்டி...பல்வேறு மாவட்டங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்...!

சித்ரா பௌர்ணமியை ஒட்டி...பல்வேறு மாவட்டங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்...!

திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் ஸ்ரீராமஅழகர் தேவஸ்தானம் சார்பில், 96-ஆம் ஆண்டு சித்திரைத் திரு விழா 15 நாட்களுக்கு முன் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் தொடங்கியது. இதனைஒட்டி, இன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. வெள்ளியங்கிரி நாதர் கோயில் அருகே உள்ள சஞ்சீ வி நதியில் ஸ்ரீராம அழகர்  பச்சைப்பட்டு உடுத்தி, அசுவ வாகனத்தில் இறங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோ விந்தா என்ற பக்தி முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வங்கப்பட்டது. 

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் வீர அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி அழகர் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தரிசனம் செய்தனர்.  

இதையும் படிக்க : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடல்” உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் சி. வி.கணேசன்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள  சீனிவாச பெருமாள் கோயிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கள்ளழகர் பயணித்து, சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கொட்டக்குடி அற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று வெள்ளிக் கிழமை என்பதால், வெண் பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். இதில் பக்தர்கள் தீப்பந்தம் ஏற்றி, சாட்டை அடித்து, கோ விந்தா முழுக்கம் எழுப்பினர்.  

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில்  ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரெங்க மன்னார், ஆத்துக்கடை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. ஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும், ரங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி ஆற்றில் இறங்கினர். தொடர்ந்து, ஆண்டாளை, ரெங்கமன்னார் சுற்றிவரும் "வையாளி வைபவம்" நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.