திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு துவக்கம்...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய  இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது. இந்நிலையில், தினமும் 13 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு துவக்கம்...

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மிகவும் புகழ்பெற்ற தீபத் திருவிழா 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில், உச்ச நிகழ்ச்சியாக வருகிற 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிப்படுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான இணையதள முன்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், கிரிவலம் செல்லவும்,  மலையேறவும் தொடர்ந்து தடை நீடிக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது