முதன் முதலாக இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், 65 வயது முதியவருக்கு முதல் முறையாக அதிநவீன இடுப்பு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதன் முதலாக இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.

திருப்பத்தூர் புதுத்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (65). கணவரின்றி தனது மகனின் ஆதரவும் இன்றி, இவர் உடன் பிறந்த சகோதரர்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். பாத்ரூமில் குளிக்க சென்ற பொழுது கால் தவறி கீழே விழுந்ததில் இவருக்கு இடுப்பு எலும்பு முறிவு சிதைவு ஏற்பட்டு வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதனையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த எலும்பு முறிவு மூட்டு மாற்று மற்றும் மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பரத்ராஜ் பரிசோதித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியத்தை அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் கலைச்செல்விக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தலைமை மருத்துவர் சாந்தி தலைமையில், அதிநவீன முழு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர் பரத்ராஜ் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே நோயாளி வெற்றிகரமாக நடந்தார். அதோடு வலியில்லாமல் ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில் கலைச்செல்வி மற்றும் அவர்கள் சகாேதரர்கள் குடும்பத்துடன் தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி, டாக்டர் பரத்ராஜ் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.