களத்தில் இறங்கிய காளைகள்...முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்...எங்கே தெரியுமா?

களத்தில் இறங்கிய காளைகள்...முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்...எங்கே தெரியுமா?

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்காஅ முதல் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக தொடங்கியது.

முதல் ஜல்லிக்கட்டு போட்டி எங்கே?:

தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் தமிழக அரசு அனுமதியுடனும் வருடாந்தோறும் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடைபெறும். ஏனென்றால், புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகப்படியான வாடிவாசல் உள்ளது. அதேபோல் இங்கு தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறுவது வழக்கம். 

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு:

அதன்படி, இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது, அதற்காக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் இடத்தை பார்வையிட்டனர். அப்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டி தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்தி வைத்து மாற்று தேதியில் நடத்திக் கொள்ள அறிவுறுத்தினர். 

இதையும் படிக்க: இந்தியா VS இலங்கை: சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ்...டி20 தொடரை கைப்பற்றியது யார்?

கோலாகலமாக தொடங்கிய முதல் ஜல்லிக்கட்டு:

இந்நிலையில் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் 500 காளைகள் மற்றும் 300 காளையர்கள் பங்கேற்று நடைபெறவிருந்த இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்று ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உறுதிமொழி ஏற்று கோலாகலமாக போட்டியை தொடங்கி வைத்தனர். 

முன்னதாக, அந்தப் பகுதியில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயத்தின் அருட்தந்தை  வாடிவாசல் முன்பு பிரார்த்தனை செய்து அப்பகுதியில் உள்ள கோயில் காளைகளை பட்டாசு வெடித்து மேல தாளங்கள் முழங்க அவிழ்த்து விட்டார்.