நகை வாங்குவது போல் நடித்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற கும்பல்...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். 

நகை வாங்குவது போல் நடித்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற  கும்பல்...

திருத்தணியைச் சேர்ந்த அசோக் குமார் ஜெயின் என்பவர் அப்பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு நேற்றிரவு நகை வாங்க வந்த நபர் ஒருவர், புதிய டிசைன் கேட்டதால், அசோக் குமார் எதிரிலிருந்த உறவினர் கடையிலிருந்து 4 தங்கச்சங்கிலியை எடுத்து வந்து காட்டியுள்ளார். அப்போது அந்த நபர், நான்கு தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி, வெளியில் நின்றிருந்த கூட்டாளியின் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி, கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டு கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்ததுடன் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உறுதி செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 12 புள்ளி 5 சவரன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.