குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை...சிறுமியை சாட்சிக்கு அழைக்கும் ஆளுநர் - மா.சுப்பிரமணியன் பேட்டி!

குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை...சிறுமியை சாட்சிக்கு அழைக்கும் ஆளுநர் - மா.சுப்பிரமணியன் பேட்டி!

எந்தக் குற்றச்சாட்டை  வைத்தாலும் ஆதாரம் இல்லை என்பதால் ஆளுநர் சிறுமியை சாட்சிக்கு அழைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் அரசினர் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். 

இதையும் படிக்க : மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி. ஆர்?

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிதம்பரத்தில் குழந்தைக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்றதாக ஆளுநர் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, நடக்காத ஒன்றை ஆளுநர் கூறுவது தவறாகும் என்று கூறியுள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டை ஏற்று தேசிய குழந்தைகள் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

ஆனால், சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்ட படிவத்தை ஆய்வு செய்ததில் அச்சிறுமிக்கு செய்யவில்லை என்று தெளிவு படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எந்த குற்றச்சாட்டை வைத்தாலும் அதற்கு ஆதாரம் இல்லை என்பதால் ஆளுநர் சிறுமியை சாட்சிக்கு அழைத்திருப்பதாக கூறினார்.