கற்களை எடுக்கவில்லை...கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவமனை!

கற்களை எடுக்கவில்லை...கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவமனை!

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காயத்தில் இருந்த கற்களை அகற்றாமல் தையல் போட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விபத்து:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெருங்குடி ஆவணம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர், இரு சக்கரவாகனத்தில் சென்ற போது குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. அப்போது கவனத்தை இழந்த மதிவாணன், வாகனத்தை மாடு மீது மோதி சாலையோரத்திலிருந்த ஜல்லிக்கற்கள் மீது விழுந்துள்ளார்.

அதிகரித்த வலி:

இந்த விபத்தில் மதிவாணன் கால் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, காயத்திற்கு தையல் போட்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அவருக்கு வலி நிற்பதற்கு பதிலாக அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்க: ரெய்டு குறித்து ஓபிஎஸ்சின் கருத்து...ஷாக்கான ஓபிஎஸ் நிர்வாகிகள்...தூண்டில் போடும் ஈபிஎஸ்!

ஜல்லிக்கற்களை அகற்றாமல் தையல்:

மதிவாணன் வலி அதிகரித்தை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு சிகிச்சை அளித்த போது தான், அடிபட்ட பகுதியில் இருந்த ஜல்லிகற்களை அகற்றாமல் தையல் போடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த பொதுமக்களிடையே, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உயிரைப் பற்றி கவலையில்லாமல், காயத்தில் இருந்த கற்களைக் கூட அகற்றாமல் தையல் போட்ட  சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.