கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முன்வரவேண்டும்! : விவசாயிகள் கோரிக்கை

கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முன்வரவேண்டும்! : விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உற்பத்தியாகும் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்யவும்,  வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க கள் கோரிக்கைவேண்டும் எனவும் விவசாயிகள் 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பண்ணந்தூர், அகரம், மருதேரி, செல்லம்பட்டி, புலியூர், அரசம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவு செய்யப்படுகிறது. இந்த விவசாயத்தை நம்பி சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பனி செய்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த ஆண்டு தேங்காய்க்கு இணையாக கொப்பரை தேங்காய் விலை கிடைத்த நிலையில், இந்த ஆண்டு மிக குறைந்த அளவுக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கொப்பரை தேங்காய் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

சீசன் துவங்க உள்ள சூழலில் விலை சரிவு விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் தேங்காய் சீசன் துவங்க உள்ள நிலையில் கொப்பரை தேங்காயின் விலை உயரவில்லை. கொப்பரை தேங்காய்  உற்பத்தி செய்வதால் நஷ்டம் ஏற்படுவதால், கொப்பரை தேங்காய்  தொழிலும் இப்பகுதியில் முடங்கியுள்ளது. இதனால் கொப்பரை உலர்த்தி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த, கொப்பரை விலை குறைவுக்கு வெளிநாடுகளில் இருந்து பாமாயில், வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படுவதே காரணமாகும்.இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு அதிக வரி விதித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து அரசம்பட்டி தென்னை ஆராய்ச்சியாளர் ஜே.கே.கென்னடி கூறுகையில் : தமிழகத்தில் நல்ல பருவ மலை ஏற்பட்டதன் காரணமாக தமிழக விவசாயிகள் சிறப்பான விளைச்சல் செய்துள்ளனர். இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், இதில் ஒரு துயரச்சம்பவமும் உள்ளது. அதாவது தமிழகத்தில் 4.65 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்களின் மகசூல் ஒன்றுக்கு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 

இதனுடைய பயன்பாடும் உலக அளவில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில், இன்றைய நிலையில், அளவுக்கு அதிகமான தேங்காய் விளைச்சலால், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதம் ஒன்னரை கோடி தேங்காய் அறுவடை செய்கின்றார்கள், தென்னை விவசாயிகள். இந்த ஒன்னரை கோடி தேங்காயை விற்பனை செய்வ இயலாத தேங்காய்களை நாங்கள் கொப்பரையாக மாற்றி விற்பனை செய்யலாம் என்று உள்ள நிலையில் வெளி மார்கெட்டுகளில் 70 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால், அரசு ஒரு அரசானையை வெளியிட்டு, சுமார் 600 கோடி ஒதுகிடு செய்து ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயிகிட்ட 291 கிலோ கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால், ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயிடம், அரசாங்கம் கூடுதலாக ஒரு டன் கொப்பரையை கொள்முதல் செய்தால் கொப்பரை விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இல்லையென்றால், வேலையாட்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத ஒரு  இக்கட்டான தற்போதைய சூழல் உறுதியாக தொடரும் என வேதனை தெரிவிக்கிறார்.